ஊடகப்பறவையே..!

ஊடகப்பறவையே
ஓராண்டா உனைப்பிரிந்து...
மெல்லினமாய் தமிழ் இனிக்க
இடையினமாய் தழிழ் வளர்த்து
வல்லினமாய் தமிழ் காத்த
எம்மினக்குயிலே
ஐபிசி யின் சாதகப்பறவையே
பாதகன் எமன் வந்து
இடையில் பறித்தது கொடுமையம்மா
காற்றலையில் எமை கைது செய்து
வீற்றிருந்தாய் எம் உள்ளத்தில்
காற்றலையில் தேடுகின்றோம்
கம்பீர குரலதனை
உள்ளிருந்தே உன்குரல்
ஒலிக்கிறது கேட்குதம்மா!

ரேணுகா உதயகுமார்
18.11.2014

Hauptkategorie: Blogs கவிதைகள் Zugriffe: 2860
Drucken