Kindle Editionவாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் என்பதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவர்களில் சிலரும். என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.
இவை என் பதின்மவயதுக் கதைகள்.
ஏற்கெனவே எழுதி அச்சுப் பதிவாகாத சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.