ஒடியல் பிட்டு

ஒடியல் மாவை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும்.

இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போலத் தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும். குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு அவிக்கவும்.

இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய் கீரை.. போன்ற காய்கறிகள் போட்டு பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, தேங்காய்ப் பூவும் தாரளமாகப் போட்டு அவிக்க மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.

Related Articles

வட்டிலப்பம்

Kaesekuchen (ohne Boden)